புற்றுநோய்க்கு மருந்தாகும் காட்டு ஆத்தாப்பழம்-Medication for Cancer
News 9611:25 AM
. இயற்கை நமக்கு அளவிடமுடியாத நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறது. அதை நாம் தான் பயன்படுத்திக் கொள்வதில்லை. புற்றுநோயை விரட்டக்கூடிய ஒரு அற்புதமான பழத்தை பற்றி இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.
புற்றுநோய்க்கு செலுத்தப்படும் Chemo மருந்துகளை எல்லாம் விட ஆயிரம் மடங்கு எதிர்ப்பு சக்தி கொண்ட பழமாக இந்த காட்டு ஆத்தாப்பழம் செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அரியவகை பழமான இது ஆப்பிரிக்காவின் அமேசான் காடுகளிலும், மத்திய அமெரிக்காவிலும் இது பரவலாக விளைகிறது.
இதில் தமிழ்நாட்டில் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கிடைக்கிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் பிரக்டோஸ் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. வைட்டமின் பி1, வைட்டமின் பி2, மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இதனுடைய விதைகள் மற்றும் இலைகள் வெவ்வேறு வகையான மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் வருகிறது.
. அதிகாலையில் மலரும் இதனுடைய பூவானது அருமையான மணம் கொண்டதாக இருக்கும். இது கேன்சரில் இருந்து மனிதனை பாதுகாக்கக்கூடிய ஆற்றல் உள்ளதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்க்கொல்லியாக கருதப்படும் புற்றுநோய் என்றாலே பலரும் அச்சம் கொள்கிறார்கள். இந்த நோய் மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாகவே இதுநாள் வரை இருந்து வந்தது.
உணவுக்குழாய், கர்ப்பப்பை, மார்பகம், குடல், பல் ஈறுகள், வாய், மூளை, சிறுநீரகம், கணையம் மற்றும் நுரையீரல் இப்படி மனித உடலில் எந்த ஒரு பாகத்தையும் விட்டு வைக்காமல் புற்றுநோய் மனிதர்களை தாக்கி வருகிறது.
சில வகையான புற்றுநோய்கள் ஆரம்ப நிலையில் யாருக்கும் தெரியாது அது முற்றி ஆபத்தான நிலையில் தான் வெளியே தெரியவரும். புற்றுநோயைத் தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இந்த நவீன உலகத்திலும் 100% சிறப்பாக செயல்படுகிறது என்று கூற முடியாது.
சில வகையான புற்றுநோய்கள் ஆரம்ப நிலையில் யாருக்கும் தெரியாது அது முற்றி ஆபத்தான நிலையில் தான் வெளியே தெரியவரும். புற்றுநோயைத் தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இந்த நவீன உலகத்திலும் 100% சிறப்பாக செயல்படுகிறது என்று கூற முடியாது.
மேலும் நீங்கள் பூண்டு, பப்பாளிப் பழம், மரவள்ளிக்கிழங்கு, மாதுளம்பழம், தக்காளி, கேரட் மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஓரளவிற்கு புற்றுநோய் தாக்காமல் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால் இது அனைத்தையும் விட சிறந்ததாக காட்டு ஆத்தாப்பழம் விளங்குவதாக சொல்லப்படுகிறது.
இதன் இலைகள், மரப்பட்டை, தண்டுகள், பூ இப்படி அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் இப்படி அனைத்திற்கும் இந்த பழம் தீர்வாக அமைந்து இருக்கிறது. மேலும் கண் பார்வையை மேம்படுவதற்கும், பாக்டீரியாவின் தாக்குதலால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது.
Tags:
0 Comments