இந்தியா சதி திட்டம்-விவரம் தெரியாமல் உலரும் பாகிஸ்தான் வீரர்கள்
News 966:24 AM
நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி வேண்டும் என்றே தோல்வியை தழுவும் என பாகிஸ்தான் அணியின் வீரர்கள் கூறிவருகிறார்கள். இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்ல வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்து இருந்தது ஆனால் அது நடக்கவில்லை.
அது மட்டுமில்லாமல் பல போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான் அணி. அதனால் அது அரையிறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பெறுவதில் நிறைய சிக்கல்கள் இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேற விடாமல் நடக்க இருக்கும் போட்டிகளில் வேண்டும் என்று இந்திய அணி தோல்வியைத் தழுவும் என்ன பாகிஸ்தான் அணி வீரர்கள் உளறி வருகிறார்கள்.
. அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றால் அடுத்து நடக்கின்ற இரு போட்டிகளிலும் கட்டாயம் அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும். அதுமட்டுமில்லாமல் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். ஏனென்றால் பங்களாதேஷ் அணி அரை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி களம் காண இருக்கிறது. இந்தியாவும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணியை அடுத்து சந்திக்க இருக்கிறது. இதில் வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் நடக்கக்கூடிய போட்டியை வைத்து தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சிக்கந்தர் என்பவர் இந்தியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அதனால் அது சந்திக்கும் கடைசி போட்டியில் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் தடுத்து விடும் என அவர் கூறியுள்ளார். இதேபோன்று பாகிஸ்தான் அணியின் வீரர் பாசித் அலியும் இதற்கு முன்பு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் இந்தியா செய்யும் இந்த செயலை ஒருபோதும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் வேண்டும் என்றே இந்தியாவிடம் மோசமாக விளையாட்டு தோற்றார் அதே போன்று இந்திய அணியும் செய்யும் என அவர் கூறியுள்ளார்.
. ஆனால் இவர்கள் கூறியது போன்று நடக்க வாய்ப்பே கிடையாது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்றால். ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் எளிதான முறையில் வெற்றி பெற்றுவிடும் அதேபோன்று வங்கதேச அணியையும் பாகிஸ்தான் வீழ்த்திவிட்டால் வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும்.
இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி வெற்றி பெற்றிருந்தால் கூட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் அதற்கான அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆனால் இது தெரியாமல் பல பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் இப்படி பேசி வருகிறார்கள்.
Tags:
0 Comments