ஆண்மை குறைவு பிரச்சனைக்கு மருந்தாகும் கேட்பாரற்று கிடக்கும் சப்பாத்திக்கள்ளி பழம்

ஆண்மை குறைவு பிரச்சனைக்கு மருந்தாகும் கேட்பாரற்று கிடக்கும் சப்பாத்திக்கள்ளி பழம்.




இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் காரணங்களாலும், நாம் மாற்றிக்கொண்ட உணவு பழக்க வழக்கங்களாலும் ஆண்மை குறைவு பிரச்சனை மற்றும் குழந்தையின்மை பிரச்சனை பல தம்பதியர்களுக்கு இடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குடும்பத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும், தொடர்ந்து வர ஆரம்பித்து இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்துவிடுகிறது.

சப்பாத்திகள்ளி பழம் இதை நீங்கள் கிராமப்புறங்களிலும், குறிப்பாக தெரு ஓரங்களிலும், பல இடங்களில் இதை நீங்கள் கண்டிருக்கலாம். கேட்பாரற்று கிடக்கும் இந்தப் பழத்தின் தான் மருத்துவ குணங்கள் குவிந்து கிடக்கின்றன. குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.


இந்தப் பழத்தை பறிக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் காரணம் அதில் இருக்கும் முட்கள். இந்தப் பழத்தை பறித்து மேற்பரப்பில் இருக்கும் முட்களை தரையில் நன்றாக தேய்த்து அது அகன்ற பிறகு அதை வெட்டி நடுப்பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான முள்ளை எடுத்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும்.

இதன் உள்ளே இருக்கும் விதையானது அதிக அளவிலான இனிப்பு சுவை கொண்டது. இது பார்ப்பதற்கு சிவந்த நிறத்தில் இருக்கும். இது பெண்களுக்கு கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைய உதவி புரிகிறது. இது குங்குமப் பூவை விட அதிக அளவில் பயன் தரக்கூடியது. ஆண்களுக்கு விறைப்பு தன்மையை மேம்படுத்துவதுடன் விந்துக்களில் உயிரணுக்களை உற்பத்தி செய்து குழந்தை பாக்கியம் பெற உதவக்கூடிய ஒரு அற்புத மருந்து.

கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டி தான் இப்பொழுது உள்ள பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதுதான் குழந்தை பாக்கியம் பெற பெரும் தடையாக இருக்கிறது. இந்த நீர் கட்டியை கரைக்க இந்த பழம் பெரும் உதவி செய்கிறது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ! 

இதை சாப்பிடும் பெண்கள் உணவில் இனிப்புகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவது கூடவே கூடாது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

Post a Comment

0 Comments