கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் 3 இந்திய வீரர்கள்
News 965:59 AM
1. மகேந்திர சிங் தோனி:
இவர் இதுவரை மூன்று உலகக் கோப்பையில் விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் உலகில் ஹீரோவான இவர் 2011 முதல் உலக கோப்பைக்காக ஆடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 340 ஒருநாள் போட்டிகளில் களம் கண்டுள்ள இவர் 2023 உலக கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். எந்த ஒரு நெருக்கடியான நிலையிலும் நிதானமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்காக பாடுபட கூடியவர் என்பதால் இவரது கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
2. கேதர் ஜாதவ்.
இவர் இந்தியாவின் வெற்றிக்காக பல போட்டிகளில் அதிரடியாக ஆடி கை கொடுத்துள்ளார். முன்பு ஒரு சமயம் 50 ஓவர் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய அணி தவித்துக் கொண்டிருந்த பொழுது. இவர் பொறுப்புடன் ஆடி சதம் அடித்தது இவரது மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. 2019 உலக கோப்பையிலும் அவர் ரன்களை குவிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இவருக்கு 34 வயதாகிவிட்டதால் 2023 வேர்ல்டு கப் போட்டி நடைபெறும் போது இவருடைய வயது 38 ஆக இருக்கும். அதனால் இந்த உலகக் கோப்பை இவருக்கு கடைசி உலகக் கோப்பையை இருக்கும் என நம்பப்படுகிறது.
3. ஷிகர் தவான்.
2015 உலகக் கோப்பையின் போது இந்தியாவின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர் இவர். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இவர் அதிக ரன்கள் குவித்திது இருக்கிறார். இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக இருக்கிறார் இந்த உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்கு கை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும் 2023 உலக கோப்பையின் போது அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது சந்தேகம்தான்.
Tags:
0 Comments