ஆட்சியை தக்க வைக்க குறுக்கு வழியில் திட்டம் போடும் எடப்பாடி
News 969:59 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை ஒட்டி தமிழக அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜெயலலிதாவிற்கு பிறகு ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது அரசியல் காரணங்களுக்காக சசிகலாவால் அவர் பதவி இறக்கப்பட்டார். சசிகலாவின் மேலிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்த சூழ்நிலையில் அவரால் முதல்வர் ஆக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.
இதனைத் தொடர்ந்து தர்ம யுத்தம் நடத்தி கட்சியிலிருந்து விலகினார் பன்னீர்செல்வம். இந்த ஆட்சியை தக்க வைக்க சசிகலாவுக்கு பக்கபலமாக இருந்து உதவியவர் தான் டிடிவி தினகரன். அடுத்ததாக எடப்பாடி உடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்தே நீக்கி விட்டார்கள். இந்த நிலையில் தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏக்களும் பதவியை பறிகொடுத்தார்கள்.
அதனால்தான் இன்றுவரை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நிலைத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் எந்த வகையிலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என உளவுத் துறையின் மூலமாக தெரிந்து கொண்ட எடப்பாடி எப்படியாவது ஆட்சி தொடர அடுத்த வழி முறைகளையும் பின்பற்ற தொடங்கி விட்டார். ஜெயலலிதா இருந்த பொழுது இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியவர்கள் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை அவ்வப்போது எடுத்து வருகிறார்கள்.
இதில் கருணாஸ் மட்டும் சில சமயம் ஆட்சிக்கு சாதகமாக இருந்து வருகிறார். இவர்கள் மட்டுமல்லாமல் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய எம்.எல்.ஏக்கள் மீது அரசுக்கு எதிராக செயல்பட்டதாக சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்க உள்ளார். இதற்காக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துடன் அரசு கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். நடந்தசட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே அதிக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என ஊடகங்கள் கணித்திருந்தனர்.
ஜெ.ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதியின் மறைவை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு பெருகி உள்ளது. இதற்கு அவருடைய செயல்பாடும் தேர்தலின்போது அவர் முன்னெடுத்துச் சென்ற பிரச்சார உத்தியுமே காரணம். பத்திரிக்கைகளின் கணிப்புப்படி திமுக ஜெயித்துவிட்டால் எடப்பாடி ஆட்சி தொடர்வது கேள்விக்குறியாகிவிடும்.
0 Comments