ஐபிஎல் போட்டியில் துரத்தும் நோ-பால் சர்ச்சை அலட்சியம் காட்டும் நடுவர்கள்:

ஐபிஎல் போட்டியில் துரத்தும் நோ-பால் சர்ச்சை அலட்சியம் காட்டும் நடுவர்கள்:




நேற்று முன் தினம் அதாவது ஏப்ரல் 17ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விளையாட்டின் போது ஏற்பட்ட தசை பிடிப்பின் காரணமாக தோணி இதில் பங்கேற்கவில்லை. இருப்பினும் சுரேஷ் ரெய்னா தலைமை ஏற்று சென்னை அணியை வழி நடத்தினார்.

அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அப்போது சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 4 வது பந்தை புவனேஸ்வர் குமார் பவுன்சராக வீசினார். மீண்டும் அதே ஓவரில் அடுத்த பந்தை பவுன்சராக அவர் வீசினார்.


கிரிக்கெட் போட்டி விதிமுறையின்படி ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே வீச முடியும். ஆனால் அந்தப் ஓவரியில் 2  பவுன்சர்களை புவனேஸ்வர் குமார் வீசியுள்ளார். இருப்பினும் அவர்கள் மீது நடுவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி விட்டார்கள். அப்போது களத்தில் இருந்த அம்பதி ராயுடுவும், ஜடேஜாவும் நடுவர்களிடம் சென்று விவாதத்தில் ஈடுபட்டார்கள் இருப்பினும் பயனில்லை.

இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியுடனான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி நோ-பால் சர்ச்சையால் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தோனியின் ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments