தலைவலியை போக்க பாட்டி வைத்தியம்-ஹெல்த் டிப்ஸ்:

தலைவலியை போக்க பாட்டி வைத்தியம்-ஹெல்த் டிப்ஸ்:


தீராத தலைவலியை போக்க எளிமையான பாட்டி வைத்தியம்:


தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு வீட்டிலேயே இருக்கிறது வைத்தியம். இப்பொழுது தலைவலி எதனால் வருகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் காரணமாகவே தலைவலி பிரச்சினை ஏற்படுகிறது.

இருப்பினும் உடம்பில் குறைவான சர்க்கரை அளவு இருப்பது, அளவுக்கதிகமாக ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்வது, ஒவ்வாமை, சத்துக் குறைபாடு, சரியான தூக்கமின்மை, ஓய்வில்லாத உழைப்பு, மேலும் புகைப் பழக்கம், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் தலைவலி ஏற்படுகிறது.

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்:


1. வெற்றிலைச் சாறுடன் கற்பூரத்தை நன்றாக கலந்து பிறகு அதை குழைத்து தலையில் பூசினால் தலைவலி தீரும்.

2. கிராம்பை சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலையில் தடவி வந்தால் தீராத தலைவலியும் உடனடியாகத் தீரும்.

3. ஜீரகம் மற்றும் கிராம்பு இந்த இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அதை குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய தலைவலி குறையும்.

4. கொதிக்கும் நீரில் காபித் தூளை கலந்து ஆவி பிடித்து வந்தால் தலைவலி உடனடியாக தீரும்.

5. சிறிது மிளகை எடுத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்றாக அரைத்து பற்றுப்போட்டு வந்தால் உடனடியாக தலைவலி குறையும்.

6. முள்ளங்கியின் சாறை எடுத்து பருகி வந்தால் தலைவலி படிப்படியாக குறையும். மேலும் முள்ளங்கி சுவாசத்தை சுத்தப்படுத்தும்.


7. காப்பி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் அதில் சிறிது எலுமிச்சை சாறை பிழிந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

8. புதினா இலைகளை நன்றாக அரைத்து அதை சாறுபிழிந்து நெற்றியில் தடவி வந்தாலும் தலைவலி குறையும்.

9. அரிசி மாவு மற்றும் கடுகுத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தலையில் பற்று போட்டு வந்தாலும் தலைவலி குறையும்.

10. வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி அதனுள்ளே எலுமிச்சை சாறை பிழிந்து சிறிது சூடாக உடன் எடுத்து பற்று போட்டு வந்தாலும் தலைவலி குறையும்.

Post a Comment

0 Comments