முதுகுவலிப் பிரச்சனைக்கு தீர்வு- ஹெல்த் டிப்ஸ்

முதுகுவலிப் பிரச்சனைக்கு தீர்வு- ஹெல்த் டிப்ஸ்

முதுகுவலியால் அவஸ்தைப்படுகிறீர்களா?
அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு:




முதுகுத்தண்டு என்பது உடலில் ஒரு சிக்கலான எலும்பு பிணைப்புகளை கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் நிலைக்கும் முதுகு தண்டு பாதுகாப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முதுகுத்தண்டை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க அன்றாட பழக்க வழக்கங்கள் மிக முக்கியம். நமது சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலமாக முதுகுத்தண்டை பாதுகாக்கலாம்.

உணர்வுகளை கட்டுப்படுத்துவது:

நமது உடலில் உணர்வு அமைப்புக்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொருத்துதான் நமது தசைகளின் இயக்கம் அமையும். மனிதனுக்கு இயல்பாக வரும் சோகம், பயம், கோபம் போன்றவற்றை கட்டுப்படுத்த முயலும் போது முதுகு தண்டு வலி ஏற்பட ஆரம்பிக்கிறது. உணர்வு வலி பின்பு உடல் வழியாக மாறாமல் இருப்பதற்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி.

ஹை ஹீல்ஸ் அணிபவர்கள்:

உயரம் குறைவாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்பு அதிகமாக ஏற்படும். இது கீழ் முதுகு தோள்பட்டை போன்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தக் கூடியது. அதனால் பெண்கள் பேஷன் என்று பாராமல் ஹை ஹீல்ஸை தவிர்ப்பது உடம்புக்கு நன்மை பயக்கும்.

செல்போன் மோகம்:

இப்பொழுதெல்லாம் பலரும் செல் போன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை பல மணி நேரம் பயன்படுத்தும்பொழுது
‘டெக் நெக்’ என்று கூறக்கூடிய பிரச்சினையை உருவாக்கும். தலையை குனிந்து செல்போன்களை பார்த்துக்கொண்டிருப்பது முதுகுத்தண்டை கடுமையாக பாதிக்கும்.

பால் பொருட்கள்:

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சிய சத்து உடம்புக்கு மிகவும் அவசியம். கால்சியம் சத்தை நாம் பெறுவதற்கு பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். மீன் மற்றும் பச்சை காய்கறிகளில் கால்சியம் சத்து மிதமிஞ்சி இருக்கிறது. இதை தவிர்க்கும் போது எலும்பு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

புகைப்பழக்கம்:

புகைப்பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிக்கும் என்று பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. இப்பழக்கம் எலும்பில் வறட்சித் தன்மையை ஏற்படுத்தி நாளடைவில் எலும்புத் தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் எலும்புத் தட்டு சிதைவு ஏற்பட்டு நாளடைவில் முதுகுத்தண்டு வலி உட்பட பல பிரச்சினைகளுக்கு நாம் ஆளாகிறோம்.

தேவையான உடற்பயிற்சிகள்:

உடல்நலம் சார்ந்த பல நன்மைகளை அளிக்கக் கூடிய உடற்பயிற்சிகளை செய்யலாம். எடை தூக்கும் உடற்பயிற்சி என்பது முதுகு எலும்புகளுக்கு வலு சேர்க்கும். வாரத்திற்கு 3 அல்லது 4 தடவைகள் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். 'சைக்ளிங்’, ‘இன்டோர்சைக்ளிங்’ போன்ற பிரபலமான உடற் பயிற்சிகளை செய்யும்போது முதுகு மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Post a Comment

0 Comments