பல நோய்களுக்கு மருந்தாகும் எளிய வீட்டு மருத்துவம்:
இப்பொழுதெல்லாம் சிலர் சிறு விஷயங்களுக்குக் கூட மருத்துவரை தான் அணுகுகிறார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பணம் மற்றும் நேரமும் விரையமாகிறது. நமக்கு அன்றாடம் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை எளிய சித்த வைத்தியத்தின் மூலமாக நாமே சரி செய்து கொள்ளலாம். அதைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்கள் மற்றவர் பயன்பெற மறக்காமல் பகிருங்கள்.
குழந்தைகளுக்கு சளி இருமல்:
அதிகப்படியான இருமலாலும், சளியாலும் மூச்சுக்கூட விடமுடியாமல் அவஸ்தைப்படும் குழந்தைகளுக்கு குப்பைமேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் போதும். உடனே சளி அனைத்தும் வாந்தியாக வெளியே வந்து விடும். ஆனால் இதை கவனமாக குறைந்த அளவே கொடுக்க வேண்டும் அதிக அளவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
பெரியவர்களுக்கு சளி இருமல்:
இதேபோல வயது வந்தவர்களுக்கு சளி, இருமல் போன்ற தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் அவர்கள் தேனை பாலிலோ அல்லது தண்ணீரிலோ தினமும் கலந்து குடித்து வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது தேவையில்லாத கொழுப்புக்களையும் உடம்பில் இருந்து அகற்றும். சளி இருமல் தொல்லைகளில் இருந்து விடுபட உதவும்.
முருங்கை விதை:
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இழந்த சக்தியை மீட்க இந்த முருங்கை விதையை நன்றாக பொடிசெய்து பாலில் கலந்து இரவு உறங்குவதற்கு முன்பு குடித்துவந்தால் ஆண்களுக்கு சக்தி பெருகுவதுடன் குழந்தை இன்மை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் விடுபட உதவும்.
தூக்கம் வருவதற்கு:
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தூக்க மாத்திரைகளையே அதிகம் சாப்பிடுவார்கள் இது பல பக்க விளைவுகள் ஏற்படும். அதற்கு நீங்கள் சாதாரணமாக உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் வெந்நீர் அருந்தியதற்கு பின்பு தூங்கச் சென்றால் தூக்கம் நன்றாக வரும். சர்க்கரை நோய் பிரச்சினை இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டியை சாப்பிட்டு விட்டு வெந்நீர் குடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.
அருகம்புல்:
அருகம்புல்லை பொடியாகவோ அல்லது சாறாகவோ வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உஷ்ணம் தணிவதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும். உடலில் தேமல் மற்றும் வெளுப்பு உள்ளவர்கள் வெள்ளைப்பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து நன்றாக மசித்து தேமல் மேலே தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
0 Comments