எடப்பாடி பழனிச்சாமி அதிரடி-அமைச்சரின் பதவி பறிபோனதற்கு காரணம் இதுதான்

எடப்பாடி பழனிச்சாமி அதிரடி-அமைச்சரின் பதவி பறிபோனதற்கு காரணம் இதுதான்




தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் மணிகண்டனை தமிழக ஆளுநர் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து இருக்கிறார். பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் தடவையாக அமைச்சர் ஒருவர் பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார். மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக ஆர் பி உதயகுமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் முதல் தடவையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மணிகண்டன். அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் அதே மாவட்டத்தில் மாவட்ட செயலாளராகவும் இருந்திருக்கிறார். இந்த சமயத்தில் தொலைக்காட்சி தொடங்குவதற்காக பிரபல பத்திரிக்கை ஒன்று இவரிடம் அனுமதி கேட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது இவர் அவர்களிடம் பேரம் பேசியதாக மேலிடத்திற்கு புகார் சென்றிருக்கிறது. அதனால்தான் அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பை ஜெயலலிதா பறித்தார் என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன. பொறுப்புக்கு வந்த பிறகு அவர் மூத்த அமைச்சர்களை மதிப்பதில்லை என்றும் தன்னை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்து வந்ததாகவும் நிர்வாகிகள் புகார் அளித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் முன்னாள் எம்பி அன்வர் ராஜாவை மேடையிலேயே இவர் விமர்சித்ததாக சொல்லப்படுகிறது. 

தற்போதைய மாவட்ட செயலாளர் முனியசாமி உடன் இவர் இணக்கமாக செயல்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இங்கு பாஜகவிற்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. மேலும் அரசு ஒப்பந்தங்களை தனக்குத் தெரிந்த ஆதரவாளர்களுக்கு அவர் வழங்குவதாக சொல்லப்படுகிறது.
மேலும் அமைச்சராக இருந்து கொண்டே டிடிவி தினகரனிடம் மிகவும் மென்மையான நடந்து கொண்டார் என்றும் இப்படி பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் வரிசையாக இவர் மீது சொல்லப்படுகின்றன.
இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் இவரைப்பற்றி மேலிடத்தில் நேரடியாக புகார் சொல்லி இருக்கிறார். எனது சொந்த தொகுதிக்குள்ளேயே அமைச்சரின் நடவடிக்கையால் நான் உள்ளே செல்ல முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் கருணாஸ். இது தொடர்பாகசமீபத்தில் அமைச்சரோடு இணைந்து செயலாற்றுவீர்களா என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நடிகர் கருணாஸ் தேவை என்றால் மட்டுமே அவரை சந்திப்பேன் என்று முடித்துக் கொண்டார். 

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மணிகண்டன் பேசியதை முதல்வர் ரசிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டார். உடுமலை ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்திலேயே கேபிள் டிவி நிறுவன தலைவராக பொறுப்பில் இருந்தார். 

அதன் பிறகு மணிகண்டன் 2016 ஆம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமித்தார். முதல்வர் எடுத்த இந்த முடிவை வெளிப்படையாகவே விமர்சிக்க துவங்கிவிட்டார் மணிகண்டன் அதேபோன்று உடுமலை ராதாகிருஷ்ணனையும் விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியது அரசு கேபிள் டிவிக்கு அமைச்சர் நான் மட்டும்தான். அதே சமயத்தில் நிறுவன தலைவராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ராதாகிருஷ்ணன் கேபிள் டிவி தொழிலை நடத்தி வருகிறார் அதில் அவர் நல்ல அனுபவம் பெற்றவர் ஆவார். தனியாரை சேர்த்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசுக்கு சொந்தமான கேபிள் டிவிக்கு நீங்கள் மாறிக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார்.
அனைத்து கேபிள் டிவி கனெக்ஸன்களையும் ஒரே இரவில் மாற்றிவிடுவது நடக்காத காரியம்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் அட்சயா கேபிள் எனும் நிறுவனத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகள் உள்ளன. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ராதாகிருஷ்ணன் நடத்திவரும் அட்சயா கேபிள் இணைப்புகளை அரசு கேபிள் இணைப்பிற்கு மாற்ற வேண்டும் இதன் மூலமாக அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்று வெளிப்படையாகக் கூறினார் இதுதான் அமைச்சர் பதவி பறிபோனது காண மிக முக்கியமான காரணம்.

Post a Comment

0 Comments