ஆண்மை சக்தியை அதிகரிக்க அற்புத மருந்து - ஹெல்த் டிப்ஸ்
News 969:33 PM
ஆண்கள் தங்களது சக்தியை அதிகரிக்க நீங்களே வீட்டில் அதற்கான வைத்தியத்தை செய்து கொள்ளலாம் இதற்காக எந்த ஒரு மருத்துவரையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது.
தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித் தாள்களில் தினந்தோறும் ஆண்மை குறைவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதில் சில சித்த வைத்திய மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் ஆண்மை குறைவை பற்றி ஆண்களுக்கு மத்தியில் அச்சத்தை விதைக்கின்றனர். இதன் மூலமாக சில ஆயிரம் பணத்தை ஆண்கள் செலவழித்து ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆண்மை குறைவு என்பது உண்மையிலேயே ஒரு பெரிய வியாதியா என்றால் அது கிடையாது. அதற்கு முறையாக வைத்தியம் செய்து கொள்ளாமல் விட்டுவிட்டால் அது ஒரு நோயாகவே மாறிவிடும். தனிமனிதன் ஒழுக்கத்தை கடைபிடித்து வந்தான் என்றால் இந்த சிக்கல் ஏற்படாது.
குறிப்பாக இந்த பிரச்சனைக்கு மன அழுத்தமும், உயர் ரத்த அழுத்தமும் மிக முக்கியமான காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இதை குணப்படுத்த முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. இளம் வயதில் செய்யும் சில தவறான பழக்க வழக்கத்தால் உடலில் உள்ள தாது உடைந்து எழுச்சி தன்மை குறைந்துவிடுகிறது. அப்படி என்றால் இதற்கு தீர்வுதான் என்ன?
ஆண்களுக்கு புத்துணர்வை கொடுக்கக்கூடிய அபார சக்தி பேரிச்சம் பழத்திற்கும் சுத்தமான தேனிர்க்கும் இருக்கிறது. இதை முறையாக கையாண்டு நாமே லேகியம் தயாரித்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
லேகியம் தயாரிக்கும் முறை:
காய்ந்த உயர் ரக பேரிச்சம் பழம் ஒரு கிலோவும், கலப்படமில்லாத சுத்தமான தேன் ஒரு கிலோ வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு அகன்ற பெரிய தட்டில் பேரீச்சம் பழங்களின் விதையை நீக்கிவிட்டு நன்றாக வெயிலில் ஒரு ஐந்து மணி நேரம் காய வையுங்கள், பிறகு அதை ஒரு பீங்கானில் நிரப்பி அதில் ஒரு கிலோ தேனையும் ஊற்றி மீண்டும் வெயிலில் ஒரு நான்கு மணி நேரம் நன்றாக காய வையுங்கள்.
தினமும் காலையில் நீங்கள் உணவருந்தி முடிந்தபிறகு ஒரு நாலு பேரீச்சம்பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிடுங்கள் பிறகு வெந்நீர் அருந்த வேண்டியது மிகவும் முக்கியம். அதேபோல இரவில் நீங்கள் ஒரு 10 பேரீச்சம் பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிட்டுவிட்டு பிறகு வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். இப்படியாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தாலே போதும் இதனுடைய மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இப்படி நீங்கள் சாப்பிட்டு வரும்பொழுது மது போன்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடக்கூடாது.
தக்காளி சூப் தயாரிக்கும் முறை:
புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கக்கூடிய ஆற்றல் இந்த தக்காளிக்கு இயற்கையாகவே இருக்கிறது என்று ஆய்வில் நிரூபித்துள்ளார்கள். இதை ஏழைகளின் ஆப்பிள் என்று கூட கூறுவார்கள். இதில் அவ்வளவு அபார சக்தி அடங்கி இருக்கிறது குறைந்த செலவில் சக்தியைப் பெற இதைப் பயன்படுத்தி எப்படி சூப் செய்வது என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
தினமும் ஒரு டம்ளர் இதனுடைய சூப் குடிப்பதால் வீரியத்தன்மை அதிகரித்து சக்தி பெருகும் என்று லைகோபின் சக்தி போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வில் நிரூபித்து உள்ளார்கள். 40 வயது நிரம்பிய ஒருவருக்கு 14 நாட்கள் தொடர்ந்து தக்காளி சூப் கொடுக்கப்பட்டது இந்த சோதனையின் முடியில் முடிவில் 12% விந்தணுக்களின் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1, நன்கு பழுத்த தக்காளி 6
2, பூண்டு 6 பல்
3, வெண்ணை 2 தேக்கரண்டி
4, பெரிய வெங்காயம் 1
5, சோள மாவு 1 மேசைக்கரண்டி
6, தக்காளி சாஸ் 2 தேக்கரண்டி
7, உப்பு மிளகுத்தூள் தேவையான அளவு.
செய்முறை:
பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும், பிறகு வெண்ணையை உருக்கி அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும் பூண்டு நன்றாக வதங்கிய பிறகு வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் தக்காளியையும் போட்டு வதக்கவும் தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் கால் லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் பிறகு அதை நன்றாக மசித்து வடிகட்டி அந்தத் தண்ணீரில் தக்காளி சாஸ் மற்றும் சோளமாவை அதில் கலந்து மீண்டும் நன்றாக ஒரு பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு பிறகு அதில் மேலே மிளகுத்தூளை தூவி பரிமாற வேண்டியது தான் பாக்கி இதை தினமும் குடித்து வந்தால் இதனுடைய வலிமையை உங்களால் உணர முடியும்.
0 Comments