உடல் ஆரோக்கியத்தை காக்க பூண்டு பால் செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்தை காக்க பூண்டு பால் செய்வது எப்படி?

ஆங்கில மருந்து மாத்திரைகளை நாடாமல் இயற்கையான வழியில் நம் உடல் நலத்தை காத்துக் கொள்ளும் வழிமுறை;



ஆங்கில மருந்து மாத்திரைகளையோ, மருத்துவரையோ நாடாமல் இயற்கையான முறையில் நம் உடலில் இருக்கக்கூடிய நோய்களை குணமாக்கிக் கொள்ள முடியும். அதில் ஒன்றுதான் இந்த பூண்டுப்பால். இதை யார் எல்லாம் சாப்பிடலாம் இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.


இதற்கு தேவையான பொருட்கள்;

1, உரித்த பூண்டு பல் ஐந்து.
2, பசும்பால் 150 மில்லி.
3, அரை தேக்கரண்டி மிளகுத்தூள்.
4, தேவையான அளவு பனங்கற்கண்டு.
5, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்.

செய்முறை;

முதலில் பூண்டின் தோலை அகற்றி விட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது பால் நன்றாக சூடாகிய பிறகு அதில் நசுக்கி வைத்திருந்த பூண்டுப்பல், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு இந்த நான்கையும்  பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஓரளவு சூடு ஆறிய பிறகு பாலில் இருக்கக்கூடிய பூண்டை நன்றாக மசித்துவிட்டு குடிக்க வேண்டியது தான்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு;

தாய்ப்பால் கொடுக்கக் கூடிய பெண்கள் இந்தப் பூண்டுப் பாலை குடித்து வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். அதுவும் பிரசவம் முடிந்த பிறகு இந்தப் பாலை குடித்து வந்தால் குழந்தைக்கு தங்கு தடையின்றி பால் கிடைப்பதுடன் குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வளர உதவி புரியும்.

இதனால் ஏற்படக்கூடிய மேலும் பல நன்மைகள்;

ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்றில் இருக்கக்கூடிய கட்டி இதையெல்லாம் இந்த பூண்டுபால் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. தினமும் உறங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் இதை குடித்தால் உறக்கம் நன்றாக வரும். திடீரென்று வரும் சளி காய்ச்சல் போன்றவற்றிற்கு இந்த பூண்டு பால் மிகவும் உகந்தது. சிலருக்கு முகத்தில் அடிக்கடி முகப்பரு வரும் அதற்கு இந்து பூண்டுபால் குடித்துவிட்டு கொஞ்சம் முகத்தில் தடவி கொண்டாலே போதும் பருக்கள் எல்லாம் வெகு விரைவில் மறைய ஆரம்பிக்கும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை விரைவில் குணமடையும். சிலர் வயிற்றுப் புழுக்களின் தொந்தரவால் அவஸ்தைப்படுபவர்கள் அப்படிப்பட்டவர்கள் இதை குடித்து வந்தால் புழுக்கள் எல்லாம் அழிந்து விடும். அதற்கு நீங்கள் இந்தப் பாலை வெறும் வயிற்றில் காலையில் தான் குடிக்க வேண்டும். மூட்டுவலி, இடுப்பு வலி, வாய்வு பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல பலனை தரும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்துகிறது. மேலும் காசநோய், மலேரியா, டிபி போன்ற நோய்களை உண்டாக்கக் கூடிய கிருமிகளை இது அழிக்கிறது. நுரையிரல் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பூண்டுப் பாலை குடித்து வந்தால் உடனடியாக பலன் கிடைப்பதை உணர்வார்கள். இது நுரையீரல் புற்றுநோய் வருவதையும் தடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது.
இது ஒரு வியர்வை பெருக்கியாக செயல்பட்டு உடலின் சக்தியை அதிகரிக்க தூண்டுகிறது. சளி பிரச்சனை உள்ளவர்களுக்கு சளியை குறைத்து சுவாச பிரச்சினையை எளிதாக்குகிறது. இது இதய அடைப்பை நீக்கி ரத்தக்கொதிப்பு பிரச்சனையை சீராக்குகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் இதை குடிக்க வேண்டும். ஆண்மை குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆற்றலை மேம்படுத்த இது உதவுகிறது.

Post a Comment

0 Comments