30 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இள நரையைப் போக்க
News 962:07 AM
30 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் இள நரையைப் போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கும் முறை;
இளமையிலேயே நரை முடி வருவதற்கு மிக முக்கியமான காரணம் முடிக்கு கருப்பு வர்ணத்தை தரும் மெலனின் என்று சொல்லக்கூடிய நிறமி குறைவாக இருப்பதுதான் காரணம். இந்த மெலனின் வயது ஆக ஆகத்தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மெலனின் இளம் வயது உள்ளவர்களுக்கே குறைய ஆரம்பித்து விடுகிறது. இந்த இள நரையைப் போக்க வீட்டிலேயே இயற்கையான முறையில் மருந்து தயாரிப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
கற்பூரவள்ளி இலை;
கற்பூரவள்ளி இலை இதை ஓமவள்ளி இலை என்றும் கூறுவார்கள். இதன் தண்டை ஒடித்து நட்டு வைத்தாலே போதும் முலைத்துக் கொள்ளும். இதை தொட்டியில் வைத்து கூட வளர்க்கலாம். கற்பூரவல்லி இலையை கையால் கசக்கி முகர்ந்தாலே போதும் ஓமத்தின் வாசனை வரும். இது உடலில் மெலனின் சுரப்பிகளை அதிகரிக்கச் செய்து இளநரை வராமல் முடியை கருமையாக்க உதவுகிறது. இப்பொழுது இந்த கற்பூரவள்ளி இலையை ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.கருவேப்பில்லை;
அடுத்ததாக கருவேப்பிலை இது முடி உதிர்வதை தடுத்து இளநரை வராமல் இருக்க உதவி புரிகிறது. சாதாரணமாக இந்த கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தாலே இளநரை வருவது குறையும். இப்பொழுது கருவேப்பிலையை ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கற்பூரவள்ளி இலையையும், கறிவேப்பிலையையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.இந்தக் கலவையை வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு உங்கள் தலையில் நன்றாக தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பின்பு முடியை நன்றாக அலசி விடுங்கள். இது ஹேர் டை போல் இல்லாமல் நிரந்தரமாக உங்கள் தலையில் இருக்கக்கூடிய நரைமுடியை படிப்படியாக கருமையாக மாற்றிவிடும். இந்த வைத்தியம் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வரக்கூடிய இளநரையை மட்டும்தான் போக்கும். 40 வயதிற்கு மேல் நரை வந்தவர்களுக்கு இது பொருந்தாது.
0 Comments