ஆண்கள் இழந்த சக்தியை மீட்க உதவும் ஓரிதழ் தாமரை
News 969:00 AM
வீரியம் மிக்க ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள்;
ஓரிதழ் தாமரை என்று கூறியவுடன் இது தாமரையில் ஒரு வகையா? குளத்தில் வளருமா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. இது நிலத்தில் வளரக்கூடிய ஒரு வகையான செடி. இதனுடைய பூ சிவந்த நிறத்தில் நடுவில் நாமம் போட்டது போல் இருக்கும். இதனுடைய காயை பார்த்தீர்களென்றால் ஒத்தைக் கல் மூக்குத்தி போலிருக்கும். இதற்கு இரத்தினபுருஷ் என்ற பெயரும் உண்டு. ஓரிதழ் தாமரையின் பூ, காய், இலை, தண்டு, வேர் இது எல்லாமே மருத்துவ குணங்கள் வாய்ந்தது தான்.
சில ஆண்கள் திருமண வயதை எட்டும் போது தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி தன்னுடைய துணையை திருப்திப்படுத்த முடியுமா என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. அதனாலேயே சில வீடுகளில் திருமணப் பேச்சை எடுத்தால் இப்பொழுது வேண்டாம் என்று தள்ளிப் போடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஓரிதழ் தாமரை மூலிகை நல்ல பலனை அளிக்கும். கண்ட கண்ட விளம்பரங்களையும் பார்த்து காசை கொடுத்து ஏமாற வேண்டிய அவசியமும் இருக்காது.
ஓரிதழ் தாமரையின் இலையை அதிகாலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு விட்டு பால் அருந்தினாலே போதும் நல்ல பலன் கிடைக்கும். இந்த இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஓரிதழ் தாமரை சூரணத்தை வாங்கி ஒரு ஸ்பூன் சூரணத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இதை பசும்பாலில் கலந்து சாப்பிடுவதை விட ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த ஓரிதழ் தாமரை சூரணத்தை சாப்பிட்டு வந்தால் உடல் நன்றாக தேறி வரும். இந்த சூரணத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வீச காய்ச்சலில் இருந்து கூட விடுபட முடியும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த ஓரிதழ் தாமரை சூரணத்தை கீழாநெல்லி பொடியுடன் சம அளவில் கலந்து கொள்ளவேண்டும். பிறகு அதை சிறு உருண்டையாக்கி அதை பாலில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயில் வரக்கூடிய மேகவெட்டை என்று சொல்லக்கூடிய அரிப்புடன் கூடிய புண்ணிற்கு இந்த சூரணம் நல்ல பலனை அளிக்கும். இந்த சூரணத்துடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கற்பூரம், கோரோஜன் இந்த இரண்டையும் சம அளவில் எடுத்து அதனுடன் பசு நெய்யை கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால்
மேகவெட்டை எளிதில் குணமாகும்.
பொதுவாக இதேபோல சூரணங்கள் சாப்பிட்டு வருபவர்கள் புகை பிடிக்கக் கூடாது உடலுறவிலும் ஈடுபடக்கூடாது. அது மட்டுமில்லாமல் பத்தியம் முடியும் வரை மதுவும் அருந்தக்கூடாது. புளியை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளவும் கூடாது.
0 Comments