நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்
News 9611:38 PM
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்;
இப்படிப்பட்ட நோய் வருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று தூய்மை இல்லாத சுற்றுப்புற சூழல். மேலும் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட கூரையில் நீண்ட நேரம் தங்குவது, டீசலில் இயங்கக்கூடிய இயந்திரங்கள் வெளியிடக்கூடிய புகையை சுவாசிப்பது, புகைப்பிடிப்பது, புகைப் பிடிப்பவர்கள் அருகில் இருந்து புகையை சுவாசிப்பது இது அனைத்தும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி குடும்பத்தில் யாருக்காவது நுரையீரல் புற்றுநோய் இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோயை பார்த்தீர்கள் என்றால் ஆண்களுக்கு வருவதை விட பெண்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். பெண்களுக்கு நுரையீரலில் வெளிப்புறத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இது மிகவும் ஆபத்தானது. இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியாது.
இது மிகவும் வெகுவாக கல்லீரல் மற்றும் எலும்பு இதிலெல்லாம் பரவிவிடும். அதனால் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். இதில் இருக்கக்கூடிய ஆறுதலான ஒரு விஷயம் அது என்னவென்றால் இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் சுலபமாக குணமாக்கிவிட முடியும்.
இதனுடைய அறிகுறிகள் என்ன?
தொடர்ச்சியாக தொண்டை வலி ஏற்படுவது. உணவை விழுங்க முடியாமல் சிரமப்படுவது அல்லது வலி ஏற்படுவது. இதை ஆங்கிலத்தில் டிஸ்பேகியா என்று கூறுவார்கள். தொண்டையில் ஆரம்பித்து உணவு குழாய் வரையில் புற்றுநோய் பரவுவதால் இந்த வலி ஏற்படுகிறது. மேலும் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுதே உடல் வலி ஏற்படுவது, குறிப்பாக இரவு நேரங்களில் கை, தோள்பட்டை, முதுகு இங்கெல்லாம் தொடர்ச்சியாக வலி ஏற்படுவது.
சிலருக்கு மார்பு பகுதியில் மிதமான வலி இருக்கும் இது நீண்ட நேரம் நீடிக்கும் சிலருக்கு நுரையீரலை சுற்றி கூர்மையான வலி இருக்கும் இதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறி தான். பலர் உடல் எடையை குறைக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது எந்த ஒரு உடற்பயிற்சியை செய்யாமல் உடல் எடை குறைய ஆரம்பித்தால் இது புற்றுநோய் செல்கள் உங்கள் உடம்பை தாக்கி இருப்பதற்கான அறிகுறி தான்.
சிலர் மூச்சை வெளியேற்றும் போதும் உள்ளே இழுக்கும்போதும் விசில் அடிப்பது போன்ற ஒரு சத்தம் வரும் இது சுவாசப் பாதையில் தூசி, அடைப்பு, இல்லையென்றால் வீக்கம் இது போன்ற காரணங்களால் கூட ஏற்படலாம் ஆனால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியையும் இப்படித்தான் இருக்கும்.
சிலருக்கு குரல் கரகரப்பாக இருக்கும் அதற்காக அவர்கள் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் சரியாகிவிடும். ஆனால் ஒருவாரத்திற்கு மேலேயும் அந்த கரகரப்பு குறையவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். இருமல் வரும் பொழுது ரத்தம் வருவது, பசியிருந்தும் சாப்பிட விருப்பம் இல்லாமல் இருப்பது, விரல் நகங்களில் வழக்கத்திற்கு மாறான மாற்றம் இதெல்லாம் அதன் அறிகுறி தான்.
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறை;
முதலில் புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், அதேபோல பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் உள்ள அதிக அளவில் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதையெல்லாம் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலமாகும். வயதானவர்களுக்கு கூட மூச்சுத்திணறல் வராது.
போதுமான அளவிற்கு உடற்பயிற்சி அதுமட்டுமின்றி தினமும் கிரீன் டீ குடித்து வந்தீர்கள் என்றால் நுரையீரல் புற்று நோய் நம்மை அண்டாது. இது அனைத்தையும் விட சுகாதாரமான சுற்றுசூழல், ஒரே மாதிரியான உணவை தினமும் சாப்பிடாமல் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது, இதுவெல்லாம் நுரையீரல் புற்று நோய் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகள் ஆகும்.
0 Comments