தொப்பையை எளிமையான முறையில் குறைக்க வழி

தொப்பையை எளிமையான முறையில் குறைக்க வழி

வயிற்று தொப்பையை (Belly) இப்படியும் கூட நீங்கள் குறைக்கலாம்;



பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொப்பை (Belly) என்பது ஒரு பிரச்சனையான விஷயம்தான். ஒருவருடைய வயிறு தட்டையாக இருப்பது என்பது அவர் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியாகும். வயிற்றில் தொப்பை விழுந்தது என்றால் அதை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்பை குறைப்பதற்கு சிலர் உடற்பயிற்சி செய்வார்கள். சிலர் பத்தியம் இருப்பார்கள். வேறு சிலரோ மருத்துவரை நாடி பணத்தை விரயம் செய்வார்கள். ஆனால் சில பானங்களை அருந்துவதால் கூட வயிற்று தொப்பையை எளிமையான முறையில் குறைக்க முடியும். உடல் எடையை குறைக்கக்கூடிய பானத்தை எப்படி தயாரிப்பது என்று இப்போது பார்ப்போம்.


இதற்குத் தேவையான பொருட்கள்;

1. உரித்த பூண்டு பல் இரண்டை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (Garlic)
2. அடுத்து அரை மூடி எலுமிச்சம் பழத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.(Lemon)
3. அடுத்து ஒரு கரண்டி சுத்தமான தேன்.(Honey)
4. அடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்.(Water)

செய்முறை;

முதலில் இரண்டு பல் பூண்டை நன்றாக இடித்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமாக சூடு பண்ண வேண்டும். தண்ணீர் கொதிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது மிதமான சூடு இருந்தாலே போதுமானது. பிறகு அந்தத் தண்ணீரை ஒரு தம்ளரில் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருந்த பூண்டுப்பல்லை அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

பிறகு அதில் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை நன்றாக அதில் பிழிந்துவிட வேண்டும் மேலும் ஒரு கரண்டி தேனையும் அதில் கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது உடல் எடையை குறைக்கக்கூடிய பானம் தயார். இப்படி தினமும் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தார்கள் என்றால் உங்கள் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உங்கள் வயிறு தட்டையாக மாறுவதை இரண்டே வாரத்தில் உங்களால் உணர முடியும்.

Post a Comment

0 Comments