உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்கக்கூடிய அற்புத மருந்து

உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்கக்கூடிய அற்புத மருந்து

உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்க முடியுமா?



முடி உதிர்வை பற்றிய கவலை யாருக்குத்தான் இல்லை? இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த கவலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக சந்தையில் கிடைக்கும் எண்ணற்ற எண்ணெய்களையும், ஷாம்புகளையும் பயன்படுத்தி பார்த்தாலும் தீர்வுதான் கிடைப்பதில்லை.

பொடுகு வராமல் இருப்பதற்கும், முடி உதிராமல் அடர்த்தியாக வளர்வதற்கும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத வகையில் ஒரு அருமையான ஆயில் எப்படி நாமே தயாரிப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.


தேவையான பொருட்கள்;

1, தேங்காய் எண்ணெய் 200 மில்லி.
2, வெந்தயம் இரண்டரை ஸ்பூன்.
3, கருஞ்சீரகம் இரண்டரை ஸ்பூன்.

செய்முறை;

இப்பொழுது நாம் முதலில் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு இரண்டரை டீஸ்பூன் கருஞ்சீரகத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது கருஞ்சீரக பொடியையும் வெந்தயப்பொடியையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக அரைத்த பொடியுடன் 200 மில்லி தேங்காயை எண்ணெயை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.



பயன்கள்;

கருஞ்சீரகப்பொடி இது தலையில் வழுக்கை வருவதையும் உதிர்ந்த முடி மீண்டும் முளைப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது முடி கருமையாக வளர்வதற்கும் உதவி புரிகிறது. வெந்தயத்தை இதில் ஏன் நாம் செல்கிறோம் என்றால் புரோட்டீன், வைட்டமின் சி, இதெல்லாம் இதில் இருக்கிறது. இதில் இளநரை வருவதை தடுத்து முடி பளபளப்பாக வளர உதவி செய்கிறது. இதில் தேங்காய் எண்ணெய் தலையில் பொடுகு வராமல் இருப்பதற்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

சூடு பண்ணும் முறை;

இப்பொழுது நீங்கள் ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி நன்றாக சூடு செய்ய வேண்டும். பிறகு அந்தத் தண்ணீர் கொதித்த பிறகு நாம் தயாரித்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி அந்த தண்ணீரின் மேலே மிதக்கவிட வேண்டும். பிறகு சிறிது வெதுவெதுப்பான சூடு வந்தவுடன் அந்த எண்ணையை ஒரு பாட்டிலில் அடைத்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

தலையில் தடவும் முறை;

நீங்கள் தினந்தோறும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த எண்ணெயை பஞ்சின் உதவியைக் கொண்டு முடியின் அடிபாகத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும் பிறகு ஒரு மணி நேரம் தலையை ஊறவைத்த பின் சீயக்காய் போட்டு குளிக்க ஆரம்பிக்கலாம்.




Post a Comment

0 Comments